உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துாசூர் ஏரியில் தடுப்பு

துாசூர் ஏரியில் தடுப்பு

எருமப்பட்டி, நாமக்கல்-துறையூர் ரோட்டில் உள்ள ரெட்டிப்பட்டியில் இருந்து எருமப்பட்டி வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், அதிகளவில் விபத்து நடக்கிறது. இதனால், விபத்துகளை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை விரிவாக்கம் செய்ய அரசிடம் இருந்து நிர்வாக அங்கீகாரம் பெறப்பட்டது. இதை தொடர்ந்து முதல் கட்டமாக, 9.2 கிலோ மீட்டர் துாரத்திற்கு, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளைவுகள் இல்லாத சாலை அமைக்கும் பணிக்கான முன்னேற்பாடு பணி, கடந்த, 10 மாதத்திற்கு முன் துவங்கியது. இப்பணியில், தற்போது, 80 சதவீதம் சாலை, பாலங்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது.இதேபோல், துாசூர் ஏரி அருகே அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தில் சாலை அகலப்படுத்தப்பட்டு பாலம் கட்டும் பணி முடிந்துள்ள நிலையில், அதிகளவில் விபத்து நடக்கும் பகுதிகளாக கருதப்படும் ஏரியின் வரப்பு பகுதிகளில் விபத்து நடக்காமல் இருக்க தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை