உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ராசிபுரம்: ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில், தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று மதியம் உணவு இடைவேளையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேசன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கடந்த, 10 ஆண்டுகளாக தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருவதை கண்டித்தும், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மக்கள் சொத்தை தனியாருக்கு விற்பது என்ற வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதை கண்டித்தும் கோஷமிட்டனர்.பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த, தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகிகள் தாமு, ரவி உள்பட, பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை