உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உணவு பாதுகாப்பு சட்டப்படி ஓட்டல்கள் நடத்த வேண்டும்

உணவு பாதுகாப்பு சட்டப்படி ஓட்டல்கள் நடத்த வேண்டும்

நாமக்கல்: நாமக்கல் நகர ஓட்டல், பேக்கரி, டீக்கடை உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. சங்க தலைவர் ராம்-குமார் தலைமை வகித்தார். செயலாளர் வேல்முருகன் வர-வேற்றார்.நாமக்கல் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க கவுரவ தலைவர் குழந்தான், மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நாமக்கல் நகரில் உள்ள அனைத்து ஓட்டல்களையும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., துறையின் கீழ் பதிவு செய்து, அரசின் உணவு பாதுகாப்பு சட்டப்-படி, ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளை சுகாதாரமான முறை-யிலும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டும் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன. நாமக்கல் மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்க தலைவர் கோஸ்டல் இளங்கோ, ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை