உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இலவச வீட்டுமனை கேட்டு மல்லசமுத்திரம் மக்கள் மனு

இலவச வீட்டுமனை கேட்டு மல்லசமுத்திரம் மக்கள் மனு

நாமக்கல்,'வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை வழ ங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரத்தை சேர்ந்த கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள், மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறோம். வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் நாங்கள், வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். கஷ்ட ஜீவனம் நடத்தி வரும் எங்களால், வாடகை கொடுக்க முடியாத நிலையில், குழந்தைகளை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்துவது சிரமமாக உள்ளது. எங்களுக்கு சொந்த நிலமோ, வீடோ இல்லை. தினமும் கூலி வேலைக்கு சென்று வருகிறோம். அதனால், எங்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு, இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை