உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வழித்தட பிரச்னையில் விவசாயியை தாக்கியவர் கைது

வழித்தட பிரச்னையில் விவசாயியை தாக்கியவர் கைது

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை அருகே, வழித்தடப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில், விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்-தனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், தொப்பப்பட்டி கரட்டு பாளை-யத்தார் காடு பகுதியை சேர்ந்தவர் சக்தி வேல், 55. இவரது தோட்டத்தில் தொப்பப்பட்டியை சேர்ந்த இளங்கோ, 45, கூலி வேலை செய்து வருகிறார். சக்திவேல் தோட்டத்திற்கு அருகே உள்ள காட்டை சேர்ந்தவர் கொடம்பகாடு கைலாசம் மகன் நித்தி-யானந்தம், 35. நிலம் தொடர்பாக சக்திவேல் மற்றும் நித்தியா-னந்தம் ஆகிய இருவர் இடையே வழித்தடப் பிரச்னையால், முன்விரோதம் உள்ளது.கடந்த, 15ம் தேதி மாலை சக்திவேல் தனது இருசக்கர வாக-னத்தில் வந்தபோது, அங்கு வந்த நித்தியானந்தம் அவரிடம் வழித்தடம் தொடர்பாக தகராறு செய்ததில் கைகலப்பு ஏற்பட்-டது. அப்போது ஆத்திரமடைந்த நித்தியானந்தம், காட்டில் களை வெட்டப் பயன்படுத்தும் களைவெட்டியால் சக்திவேலின் காலில் சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க வந்த தொழிலாளி இளங்-கோவின் கையையும் நித்தியானந்தம் கடித்துக் காயப்படுத்தினார். படுகாயமடைந்த சக்தி வேல், இளங்கோவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் சக்திவேல் மேல் சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளங்கோ ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து நித்தியானந்தத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ