உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் சமரச பேச்சில் அதிக வழக்குகளில் தீர்வு

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் சமரச பேச்சில் அதிக வழக்குகளில் தீர்வு

நாமக்கல்,:''கடந்த ஓராண்டில் சமரச பேச்சுவார்த்தை மூலம், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிக வழக்குகளை தீர்த்து வைத்துள்ளது,'' என, மாவட்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி ராமராஜ் பேசினார்.தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா, நாமக்கல்லில் நடந்தது. ஆர்.டி.ஓ., பார்த்தீபன் தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம் வரவேற்றார். மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ரமோலா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையர் ராமராஜ், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது: புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019ல் இயற்றப்பட்டும், மூன்றாண்டுகள் தமிழகத்தில் நுகர்வோர் நீதிமன்றங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தது. 2022ல் தமிழக அரசு, 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு தலைவர்களையும், உறுப்பினர்களையும் நியமித்தது. இதையடுத்து, நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குகள் விரைவாக தீர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டில் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில், பத்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த வழக்குகள் உட்பட, 300 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அவற்றில், 36 வழக்குகள் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள, 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில், சமரச பேச்சுவார்த்தை மூலம், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், அதிக தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை