உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேசிய நுாலக வாரவிழா ஓவியம், பேச்சு போட்டி

தேசிய நுாலக வாரவிழா ஓவியம், பேச்சு போட்டி

நாமக்கல்,: நாமக்கல் மாவட்ட மைய நுாலகம் மற்றும் மைய நுாலக வாசகர் வட்டம் மற்றும் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், 58வது தேசிய நுாலக வார விழா, நாமக்கல் மாநகராட்சி கோட்டை உயர்-நிலை பள்ளியில் நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியருக்கு பொது அறிவு வினாடி - வினா, ஓவியம் மற்றும் பேச்சு போட்டி நடத்தப்பட்-டது. மைய நுாலக முதல் நிலை நுாலகர் சக்தி வேல் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் தில்லை சிவக்-குமார் வரவேற்றார். வாசகர் வட்ட துணை தலைவர் இளங்கோ, இராண்டாம் நிலை நுாலகர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்லாசிரியர் விருது பெற்ற செந்தில்குமார் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். போட்டியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்-கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.ஜவகர் சிறுவர் மன்ற கலை ஆசிரியர்கள் வெங்கடேஷ், சர-வணன், பாண்டியன், ராமச்சந்திரன், பிரவீன், தேவயாணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி