உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போகி பண்டிகையை முன்னிட்டு ஆவாரம்பூ, பூலப்பூடு விற்பனை ஜோர்

போகி பண்டிகையை முன்னிட்டு ஆவாரம்பூ, பூலப்பூடு விற்பனை ஜோர்

நாமக்கல்: போகி பண்டிகையை முன்னிட்டு, வீடு, வர்த்தக நிறுவனங்கள், வாகனங்களை அலங்கரிப்பதற்காக, ஆவாரம்பூ, பூலப்பூடு விற்பனை நேற்று ஜோராக நடந்தது.'பழையன கழிந்து புதியன புகுதல்' போகி பண்டிகையின் விளக்கமாக பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் தான் போகியாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும், பொங்கல் கொண்டாட்டம் நான்கு நாட்கள் விமரிசையாக இருக்கும். இந்தாண்டு பொங்கல் விழா, இன்று (ஜன., 14) போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. போகி என்றாலே, பழைய குப்பையை தீயிட்டு கொளுத்துவதுதான் முதலில் நினைவுக்கு வரும்.இன்று விவசாயிகள் நல்ல விளைச்சலுக்காக, மனம் உருகி இறைவனை வழிபடுவர். விவசாயத்திற்கு உதவும் கருவிகளை வணங்கி நன்றி செலுத்து கின்றனர். பழைய பொருள்களை மட்டுமின்றி, எதிர்மறையான பழைய சிந்தனைகளையும் மாற்றி, புதிய அத்தியாயத்திற்குள் நுழையும் வாய்ப்பாகவே போகி கொண்டாடப்படுகிறது.இன்று சாமந்தி மாலைகள், மாவிலை, ஆவாரம்பூ, பூலப்பூடு, வேப்ப இலை ஆகியவற்றை சேர்த்து, வீடு, வர்த்தக நிறுவனங்கள், வாகனங்களில் கட்டி, போகி பண்டிகையை கொண்டாடுவர். அதற்காக, நாமக்கல் மோகனுார் சாலை, உழவர்சந்தை உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆவாரம்பூ, பூலப்பூடு ஆகியவற்றை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை