உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எஸ்.ஐ.ஆர்., பதிவேற்றம் தி.கோடு ஆர்.டி.ஓ., ஆய்வு

எஸ்.ஐ.ஆர்., பதிவேற்றம் தி.கோடு ஆர்.டி.ஓ., ஆய்வு

திருச்செங்கோடு,:தமிழக முழுவதும், எஸ்.ஐ.ஆர்., பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாமக்கல்லில், திருச்செங்கோடு நகராட்சியின், 33 வார்டுகளிலும் உள்ள, 87 ஓட்டுச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு, எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கப்பட்டது. அதை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யும் பணி, நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடந்தது. 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., லெனின் பார்வையிட்டார். இதுவரை, 40 சதவீத படிவங்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை