உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, தேளூர்பட்டியை சேர்ந்த வர் கருப்பண்ணன், 62. இவர், கடந்த, 10ல் கூலி வேலைக்கு சென்று விட்டு, இரவு, 7:00 மணி யளவில் மதுபோதையில், செவ்வந்திப்பட்டி பால் சொசைட்டி அருகே சென்றுள்ளார். அப் போது, அங்கு மூடப்படாமல் இருந்த பொது கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர், கிணற் றில் விழுந்தவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கிணற்றிலேயே உயிரிழந்ததாக ‍தெரிவித்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ