மேலும் செய்திகள்
மராத்தான் போட்டி; 988 பேர் பங்கேற்பு
05-Oct-2025
தண்ணீர் தட்டுப்பாடு; பொதுமக்கள் பாதிப்பு
05-Oct-2025
குன்னுார்:நீலகிரி மலை ரயில் சேவை, 1899 ஜூன் 15ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு துவங்கியது. இன்று, 125வது ஆண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், இந்த மலை ரயில் உருவாக காரணமாக இருந்த பிரிட்டீஷ் மேற்பார்வை பொறியாளர் ஜே.எல்.எல்.மோரான்ட் என்பவரை நினைவுக்கூற ரயில்வே நிர்வாகம் கடமைப்பட்டுள்ளது.நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் தர்மலிங்கம் வேணுகோபால் கூறியதாவது:நீலகிரி மலை ரயில் உருவாக முக்கிய காரணம் பிரிட்டிஷ் மேற்பார்வை பொறியாளர் ஜே.எல்.எல்.மோரான்ட். உலகம் முழுதும் ரயில் இயங்க காரணமான ரிகன் பாக் என்பவரை நீலகிரிக்கு அழைத்து வந்து அதற்கான பணிகளை துவக்கினார்.போதிய நிதி இல்லாமலும், நிர்வாகத்தின் போதிய ஒத்துழைப்பு இல்லாமலும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இவரின் உதவியாளர் ரோமன் அப்ட் என்பவரால் பணி நடந்தது. 1886 ஜூன் 17ல், ஆஸ்திரேலியாவில் நோயால் மோரான்ட் இறந்தார். அதனால், 1899ல் அவரது கனவு நினைவாகும் போது மோரான்ட் உயிருடன் இல்லை.குன்னுாரில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயம், வெலிங்டன் தேவாலயம், கூடலுார் புரோட்டஸ்டன்ட் தேவாலயம், லாரன்ஸ் மற்றும் பிரீக்ஸ் பள்ளிகள், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவாயில் கட்டடம் ஆகியவை மோரான்ட்டால் கட்டப்பட்டவை.இத்தகைய சிறப்பு பெற்ற இவரின் புகைப்படம் எங்கும் கிடைக்கவில்லை. எனினும், மலை ரயில், 125ம் ஆண்டு விழாவில் இவரை நினைவுக்கூற அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
05-Oct-2025
05-Oct-2025