உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நாயை கவ்வி சென்ற சிறுத்தை: மக்கள் அச்சம்

நாயை கவ்வி சென்ற சிறுத்தை: மக்கள் அச்சம்

குன்னுார்;குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு அருவங்காடு கிடங்கு அருகே வந்த சிறுத்தை கேட்டை தாண்டி வீட்டில் கூண்டில் இருந்த வளர்ப்பு நாயை கவ்வி சென்ற காட்சி, அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில், கட்டப்பட்டு வனச்சரகர் செல்வகுமார் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதேபோன்று, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்கனவே ஒரு நாயை வேட்டையாடி சென்றது தெரியவந்தது. மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'வரும் நாட்களில் தொடர்ந்து கண்காணித்து மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை