உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் மாணவர்கள்; இளைஞர்கள் பங்கேற்பு

போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் மாணவர்கள்; இளைஞர்கள் பங்கேற்பு

கோத்தகிரி;கோத்தகிரியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே, போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஓட்டம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, 'ஐலண்ட் டிரஸ்ட்' தலைவர் அல்போன்ஸ்ராஜ் தலைமை வகித்தார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ இளைஞர்களிடையே பேசியதாவது:மனித மூளை என்பது, ஒரு அற்புதமான கம்ப்யூட்டர். அதில், ஒரு கோடி செல்களும், 10 ஆயிரம் கோடி நியூரான்களும் இடைவிடாது இயங்கி வருகின்றன. நமது மனமும் மூளையின் ஒரு பகுதியாகும். மனித மனம் எப்பொழுதும் மகிழ்ச்சியை தேடி கொண்டிருக்கும் இயல்புடையது.இளைஞர்கள் எப்போதும் மொபைல் போனில் மூழ்கி இருப்பதற்கும் காரணம் மகிழ்ச்சிக்காக தான். அதில், பலர் மகிழ்ச்சியை தேடி போதைக்கு அடிமையாகிறார். போதையால், உடலின் எந்த பாகம் பாதிக்கப்பட்டாலும், அது மீண்டும் இயற்கையால் மீட்டெடுக்கப்படுகிறது.ஆனால், மனித மூளை மட்டும் ஒருமுறை செயல் இழந்தால், அதனை திரும்ப பெற இயலாது. குடிப்பவரின் மூளை மட்டும் இதனால் பாதிக்கப்படுவதில்லை. அவருடைய சந்ததிகளின் மூளையும் மரபணு மூலம் பாதிக்கப்படுகிறது.போதைப் பொருட்கள் காற்றில் மிதப்பது போன்ற சுகமான உணர்வை தந்தாலும், மூளை மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் அணுக்கள் அனைத்தையும் சிதைக்கிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதனைப் புரிந்து கொண்டு போதை பழக்கத்தின் பக்கமே போகாமல் இருப்பது தான் அறிவுடைமை. இவ்வாறு, அவர் பேசினார்.மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், கோத்தகிரி - டானிங்டன் இருந்து, பஸ் நிலையம் வரை நடைபெற்ற மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். வள்ளலார் நற்பணி மன்ற செயலர் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் சுஜாதா வரவேற்றார். இசை அறக்கட்டளை தலைவர் சாராள், கேர் அறக்கட்டளையின் மண்டல கள இயக்குனர் வினோபா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை