மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
குன்னுார்:குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் துவங்கிய குழந்தைகளுக்கான தேசிய அளவு சாகச பயிற்சி முகாமில், வளர்ப்பு பிராணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கான, 10 நாட்கள் சிறப்பு சாகச பயிற்சி முகாம் கடந்த, 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. அதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 125 மாணவ மாணவியர் பங்கேற்று உள்ளனர்.நேற்று விலங்குகள் வதை தடுப்பு சங்கம் (எஸ்.பி.சி.ஏ., ) சார்பில் வெலிங்டன் தங்கராஜ் நினைவு மைதானத்தில் வளர்ப்பு பிராணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த செயல் உறுப்பினர் நஹினா பேசுகையில், ''வளர்ப்பு பிராணிகளை அடித்தல் உதைத்தல் அதிக சுமைகள் ஏற்றி சித்ரவதை செய்தல் போன்றவை செய்யக்கூடாது. வளர்ப்பு பிராணிகளை அன்பாக பழக வேண்டும். தற்போது குழந்தைகளுக்கு நாய்கள் உட்பட வளர்ப்பு பிராணிகள் மீது அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். சில நேரங்களில் நாய்களிடம் புதிதாக அணுகும் போது கடிக்க முட்படுவதால் அதனை அறிந்து அன்பாக பழகி பிறகு அருகில் செல்ல வேண்டும்,'' என்றார்.மேலும், 'நாய்கள் உட்பட வளர்ப்பு பிராணிகளை கையாளுதல் ; தெருக்களில் விடப்படும் நாய்களை பராமரிப்பது ; விலங்குகள் மீதான கொடுமையை தடுப்பதற்கான சமூகத்துடன் தொடர்பு கொள்வது,' உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டன.சங்க செயல் உறுப்பினர்கள் அனிதா பிரேமா உட்பட பலர், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, வளர்ப்பு பிராணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025