உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அனுமதி இல்லாத இடத்தில் ஆட்டோக்கள் நிறுத்துவதால் பாதிப்பு

அனுமதி இல்லாத இடத்தில் ஆட்டோக்கள் நிறுத்துவதால் பாதிப்பு

குன்னுார்;குன்னுார் மவுண்ட் ரோடு பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்துவதால் பாதசாரிகள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.குன்னுார் மவுன்ட்ரோடு வழியாக அரசு மருத்துவமனை, பள்ளிகள், கோவில்கள், தேவாலயம், மசூதிகள், செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. மேலும், மார்க்கெட்டிற்கு பொருட்களை வாங்க வருபவர்கள் இவ்வழியாக வர வேண்டும்.ஏற்கனவே 'பார்க்கிங்' வசதி இல்லாத நிலையில், இருசக்கர வாகனங்கள், கார்கள் நிறுத்த சிரமம் உள்ளது. மார்க்கெட் நுழைவாயில் அருகே ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், மக்கள் நடந்து செல்லவும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.'ஏற்கனவே வாகன நெரிசல் அதிகமாக இருப்பதால் இங்கு ஆட்டோக்கள் நிறுத்தக்கூடாது,' என, நகராட்சி சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.எனினும், விதிகளை மீறி ஆட்டோக்கள் நிறுத்துவதை போலீசார் ஆய்வு செய்து, ஸ்டான்ட்களில் மட்டுமே நிறுத்த அனுமதிக்க வேண்டும். மக்கள் கூறுகையில், 'லெவல் கிராசிங்' பெட்ரோல் பங்க் அருகிலும் ஊட்டி பஸ் ஸ்டாப் இடத்தில் ஆட்டோக்கள் நிறுத்துவதை தடுத்து நிழற்குடை அமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி