மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
23 hour(s) ago
சூலூர்;காய்கறிகள், பழங்கள் சேகரிக்க பயன்படும் சிப்பம் கட்டும் அறை கட்ட, தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் அறிக்கை:சுல்தான்பேட்டை வட்டாரத்தில் அப்பநாயக்கன்பட்டி, செஞ்சேரி புத்தூர், பச்சாபாளையம், குமாரபாளையம் ஆகிய ஊர்களில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இங்கு, தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், காய்கறிகள், பழங்கள் சேகரித்து சிப்பம் கட்ட பயன்படும் அறை கட்ட, 2 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது. அறை கட்ட விரும்பும் விவசாயிகள், ஆதார், ரேஷன் அட்டை நகல், சிட்டா, அடங்கல், நில வரைபடம், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்டார தோட்டக்கலைத்துறை அலுலகத்தை வேலை நாட்களில் அணுகி பயன்பெறலாம். மேலும், t horticulture.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.
23 hour(s) ago