உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி மக்களை ராஜாவிடமிருந்து காப்பாற்றுவதற்காக முருகன் வந்தார் ஊட்டியில் அண்ணாமலை பேட்டி

நீலகிரி மக்களை ராஜாவிடமிருந்து காப்பாற்றுவதற்காக முருகன் வந்தார் ஊட்டியில் அண்ணாமலை பேட்டி

ஊட்டி:''ராஜாவுடன் சண்டை போட முருகன் இங்கு வரவில்லை; நீலகிரி மக்களை ராஜாவிடமிருந்து காப்பாற்றுவதற்காக வந்துள்ளார்,'' என, அண்ணாமலை கூறினார். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நிருபர்களிடம், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:நீலகிரி மாவட்டம், ஊட்டியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பிரதமர் மோடி மற்றும் மூத்த தலைவர்கள் தெளிவாக உள்ளனர். ராஜ்யசபா பதவி இருந்தும் கூட மோடி விருப்பத்தின் பேரில், முருகன் நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். ராஜாவுடன் சண்டை போட முருகன் இங்கு வரவில்லை. நீலகிரி மக்களை ராஜாவிடமிருந்து காப்பாற்றுவதற்காக முருகன் வந்துள்ளார். நீலகிரி பிரச்னைகளை முருகன் நிச்சயமாக தீர்த்து வைப்பார். அவரின் உழைப்பை பார்த்திருப்பீர்கள். குறிப்பாக, மூன்று துறைகளை வைத்து கொண்டு பல்வேறு பணிகளை திறம்பட செய்துள்ளார்.நீலகிரியில் தேயிலை பிரச்னையை தீர்க்க மத்திய அரசின் சம்மந்தப்பட்ட துறை அமைச்சரை முருகன் பல முறை சந்தித்து பேசியுள்ளார். நீலகிரி டீயை அமுல் நிறுவனம் வாங்க அந்த நிறுவன அதிகாரியை சந்தித்து பேசியதன் காரணமாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் ஊட்டியில் ஆய்வு நடத்தி சென்றுள்ளனர். நீலகிரியில் அமுல் நிறுவனம் 'டீ டிவிஷன்' அமைத்து, அங்கு தேயிலை சென்றால், விவசாயிகளுக்கு ஏற்படும் நேரடி தொடர்பு மூலம் தேயிலைக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.நீலகிரியை பொறுத்த வரை மனித-விலங்கு மோதல், இன்னும் மின்சாரம் வசதியில்லாத கிராமங்கள் உள்ளன. நீலகிரியில் தேயிலை தோட்டங்கள் எல்லாம் விலைக்கு போய் கொண்டிருக்கிறது. இதனை மாற்ற வேண்டும்.அதற்கு, நீலகிரி மக்கள் கட்சியை தாண்டி ஓட்டு போட வேண்டும். முருகன் எம்.பி.,யானால் நீலகிரி மக்களின் பிரச்னைகள் படிப்படியாக தீர்க்கப்படும். பா.ஜ., வை ஆதரிக்க வேண்டும். நீலகிரி மக்களுக்கு சேவை செய்ய பிரதமர் தயாராக உள்ளார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு, அண்ணாமலை பேசினார். உடன் நீலகிரி தொகுதி வேட்பாளர் முருகன் உட்பட பலர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி