உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கஞ்சப்பள்ளி ஊராட்சியை பிரிக்க மக்கள் எதிர்ப்பு

கஞ்சப்பள்ளி ஊராட்சியை பிரிக்க மக்கள் எதிர்ப்பு

அன்னுார்;கஞ்சப்பள்ளி ஊராட்சியை பிரிக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தமிழக அரசுக்கு, ஒரு திட்ட வரைவு அறிக்கையை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரிய ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாகப் பிரிப்பது, 5,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள ஊராட்சிகளை இரண்டு முதல் மூன்று ஊராட்சிகளாக பிரித்தல் என வரையறுத்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதையடுத்து, கஞ்சப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் அளித்த மனுவில், 'கஞ்சப்பள்ளி ஊராட்சியை இரண்டாக பிரிக்கக்கூடாது. இந்த ஊராட்சியில் மக்கள் தொகை 5,000க்கு குறைவாக உள்ளது. கிராமங்களும் குறைவாகவே உள்ளன. எனவே ஊராட்சி பிரிக்கப்படாமல் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை