உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கல்லூரி மாணவர்களை தாக்க வந்த கும்பல் கைது

கல்லூரி மாணவர்களை தாக்க வந்த கும்பல் கைது

மேட்டுப்பாளையம் : கோவில்பாளையம் அருகே கல்லூரி மாணவர்களை தாக்க முன்னாள் மாணவர் மற்றும் அவரது கூட்டாளிகள் அரிவாள், கத்தி, கம்புடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.அன்னுார் அடுத்த கோவில்பாளையம் அருகே வழியாம்பாளையம் பகுதியில் தனியார் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி என இரண்டு கல்லூரிகள் உள்ளன. இதில் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதேபோல் பிரவீன் டெக்னாலஜி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர்கள் மற்றும் இவர்களது நண்பர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதனிடையே பிரவீனின் செல்போனை, வெற்றிவேல் பறித்துள்ளார். பிரவீன் செல்போனை, வெற்றிவேலிடம் இருந்து வாங்குவதற்காக அவரது கல்லூரியில் படித்து முடித்த முன்னாள் மாணவர் கோவில்பட்டியை சேர்ந்த தீபக்,21 என்பவரை அழைத்துள்ளார். தீபக் தனது நண்பர் லோகேஷ் உடன், வெற்றிவேல் அறைக்கு சமாதானம் பேச சென்றார். அப்போது வெற்றிவேல் தரப்பினர் தீபக், லோக்கேஷை தாக்கியதாக கூறப்படுகிறது.இதையடுத்து தீபக், 21 தனது நண்பர்களும், உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்களுமான பிரதீப், 21, ஜெர்மன் ராஜேஷ், 24, 17 வயது சிறுவன், சந்தோஷ், 25, ராகுல் கணேஷ், 24 உள்ளிட்டோருடன் வாடகை கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் கத்தி, அரிவாள், கம்புடன் வழியாம்பாளையத்தில் உள்ள வெற்றிவேல் அறைக்கு கடந்த 22ம் தேதி இரவு சென்றனர். இதை பார்த்த வெற்றிவேல் மற்றும் அவரது நண்பர்கள் அறையை பூட்டி கொண்டு உள்ளே இருந்தனர்.அருகில் உள்ள வீட்டார் சத்தம் கேட்டு உடனே வெளியே வர தீபக் மற்றும் அவரது கூட்டாளிகள், வெற்றிவேலின் பைக்கை மட்டும் எடுத்து கொண்டு, வெற்றிவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்து, தப்பி சென்றனர்.இதையடுத்து வெற்றிவேல் அளித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, பிரதீப், 21, ஜெர்மன் ராஜேஷ், 24, 17 வயது சிறுவன், சந்தோஷ், 25, ராகுல் கணேஷ், 24, தீபக், 21 உள்ளிட்டோரை கைது செய்தனர். வெற்றிவேலின் பைக்கை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை