மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கோத்தகிரி : கோத்திகிரி பகுதியில் உருளை கிழங்கு தோட்டங்களில், களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் கட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக, மலை காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. அதில், முதலீடு அதிக தேவைப்படும் என்பதால், உருளைக்கிழங்கு சாகுபடி குறைந்த பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கூடுமானவரை கடன் பெற்று, நடப்பு போகத்தில் உருளை கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள், மழை ஓய்ந்துள்ள நிலையில், தோட்டங்களில் களை எடுத்து, உரமிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.விவசாயி ராமலிங்கம் கூறுகையில், ''உருளைக்கிழங்கு பயிர் செய்ய விதை, பூச்சி மருந்து உட்பட, இடுப்பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. தவிர, வன விலங்குகளின் தொந்தரவு அதிகம். இதனால், விவசாயிகளால், கூடுதல் பரப்பளவில் உருளைக்கிழங்கு பயிர் செய்ய முடியாத நிலை உள்ளது. தற்போது, கட்டுப்படியான விலை கிடைப்பதால், அதிக சிரத்தை எடுத்து, குறைந்த பரப்பளவில் பயிரிட்டு பராமரித்து வருகிறோம்,'' என்றார்.
03-Oct-2025