உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வழக்கில் சிக்கிய 1,350 வாகனங்கள்

வழக்கில் சிக்கிய 1,350 வாகனங்கள்

ஊட்டி: மாவட்டம் முழுவதும் வழக்கில் சிக்கிய, 1350 வாகனங்கள் உருகுலைந்து காணப்படுகிறது.ஊட்டி, குனனுார், கூடலுார் டிவிஷன்களில், 40க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இங்கு, விபத்து, கொலை, கொள்ளை, கடத்தல் வழிப்பறி, திருட்டு உட்பட பல குற்ற வழக்குகளில் சிக்கி பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஸ்டேஷன்களுக்கு கொண்டுவரப்பட்டு ஒதுக்குப்புறமான இடங்களில் நிறுத்தப்படுகிறது.பெரும்பாலான ஸ்டேஷன்களில் அளவுக்கு அதிகமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சில வழக்குகள் பல ஆண்டுகள் இழுபறியில் உள்ளதால், போலீஸ் ஸ்டேஷன்களில் புதர் சூழ்ந்து துருப்பிடித்து காணப்படுகிறது. விசாரணைக்கு கோர்ட்டில் ஒப்படைக்க முடியாமல் ஸ்டேஷன்களில் உள்ளன.இதன் படி, 'நீலகிரியில் உள்ள, 40 போலீஸ் ஸ்டேஷன்களில், புறநகர் போலீஸ் ஸ்டேஷன்கள், நகர் பகுதி போலீஸ் ஸ்டேஷன்கள்,' என, 1350 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை முடிய குறைந்தபட்சம், 2 முதல் 5 ஆண்டுகள் ஆவதால் வாகனங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு யாருக்கும் பயனில்லாத நிலைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது.இன்ஸ்பெக்டர் முரளிதரன் கூறுகையில், '' வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அவைகளை வழக்கின் தீர்ப்பு வராமல் ஒன்றும் செய்யமுடியாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி