உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொட்டியில் சிக்கிய நாய்; மீட்ட தீயணைப்பு துறை

தொட்டியில் சிக்கிய நாய்; மீட்ட தீயணைப்பு துறை

குன்னுார் : குன்னுார் ஓட்டுப்பட்டறை பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு தொட்டியில் சிக்கிய நாயை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.குன்னுார் ஓட்டுப்பட்டறை பகுதியில் குடிநீர் குழாய் இணைப்புக்கான சிறு தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதில், நாய் ஒன்று சிக்கி தவிப்பதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.நிலைய அலுவலர் குமார் மேற்பார்வையில், தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டனர். அப்போது அந்த நாய் மீட்பவர்களையும் கடிக்க முயன்றது. எனினும் ரஞ்சித், ரெவன்த் உட்பட தீயணைப்பு வீரர்கள் சரியான நேரத்தில் தலையை பிடித்து கயிறு அவிழ்த்து விட்டனர். உடனடியாக அங்கிருந்து தெரு நாய் ஓட்டம் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ