உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தாயுடன் சேர்ந்தது குட்டி யானை: வனத்துறை நிம்மதி

தாயுடன் சேர்ந்தது குட்டி யானை: வனத்துறை நிம்மதி

உதகை: கூடலூர் அருகே தாயை பிரிந்து தவித்து வந்த குட்டி யானை, யானைகள் கூட்டத்துடன் சேர்க்கப்பட்டது.மசினகுடி, மாயாறு சாலையோரம் குட்டி யானை ஒன்று அதன் தாயை பிரிந்து தவித்தபடி சுற்றித் திரிந்துள்ளது. குட்டி யானையின் நடமாட்டம் பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக அங்கு சென்றனர்.குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், தாயுடன் சேர்க்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். ட்ரோன் காமிரா உதவியுடன் தாய் யானை எங்கு உள்ளது என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கினர்.தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர், சீகூர் வனப்பகுதியில் அசூரா மட்டம் என்ற இடத்தில் தாய் யானை, தமது கூட்டத்துடன் சுற்றித் திரிவதை கண்டுபிடித்தனர். பின்னர் நேற்றிரவு குட்டி யானையுடன் அங்கு சென்று 3 யானை கூட்டங்கள் இருந்த இடத்தில் பாதுகாப்பாக கொண்டு சென்றுவிட்டனர்.குட்டியானையை அதன் தாயுடன் சேர்த்துவிட்டாலும், அதன் நடமாட்டத்தை 3 குழுக்களாக பிரிந்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை