உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்

பெ.நா.பாளையம்;சின்னதடாகம் வட்டார விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சின்னதடாகத்தில் புதிய வேளாண் அலுவலகம் நாளை (13ம்தேதி) திறக்கப்படுகிறது. சின்னதடாகம் வட்டாரத்தில், 24 வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம் பாளையம், பன்னீர்மடை உள்ளிட்ட விவசாயிகளுக்காக, சின்ன தடாகத்தில் புதிய வேளாண் அலுவலகம், 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது புதிய வேளாண் அலுவலகத்தை கோவை வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், நாளை, காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் சின்னதடாகம் வட்டாரத்தில் நஞ்சுண்டாபுரம், பாப்பநாயக்கன்பாளையம், மடத்தூர், வரப்பாளையம், தாளியூர், சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு, வாழை, தென்னை, காய்கறிகள் உள்ளிட்ட சாகுபடிகள் நடந்து வருகின்றன. இப்பகுதி விவசாயிகள் தமிழக அரசின் சார்பாக மானியத்துடன் வழங்கப்படும் இடுபொருள்கள் பெறவும் மற்றும் மத்திய, மாநில அரசின் பல்வேறு வேளாண் அறிவிப்புகள் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் பெரியநாயக்கன்பாளையம் வேளாண் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து செல்ல வேண்டி இருந்தது. தற்போது சின்ன தடாகத்திலேயே வேளாண் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வருவதால், இனிமேல் விவசாயிகள் தங்களது அனைத்து வேளாண் தேவைகளுக்கும் சின்னதடாகம் வேளாண் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பலன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை