உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அடிப்படை வசதிக்கு ஏங்கும் பெம்பட்டி மக்கள்: இத்தலார் ஊராட்சி அலட்சியம்

அடிப்படை வசதிக்கு ஏங்கும் பெம்பட்டி மக்கள்: இத்தலார் ஊராட்சி அலட்சியம்

ஊட்டி;பெம்பட்டி கிராமத் திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஊட்டி அருகே, இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட பெம்பட்டி கிராமத்தில், 150க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தவில்லை. ஒரு சில குடியிருப்புகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்ட பகுதிகள் ஆங்காங்கே உடைந்துள்ளது. இதனால், கழிவுநீர் திறந்த வெளியில் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், போதிய தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேர வன விலங்கு தொல்லையால் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பெம்பட்டி கிராம மக்கள் பல முறை இத்தலார் ஊராட்சி நிர்வாகத்திற்கு அடிப்படை வசதி செய்து தர கோரி மனு அளித்துள்ளனர். ஆனால், இத்தலார் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிராம மக்கள் கூறுகையில், ' பெம்பட்டி கிராமத்திற்கு அடிப்படை வசதி கோரி இத்தலார் ஊராட்சி நிர்வாகத்திற்கு பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் ஊராட்சிநிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கிராம மக்கள் ஒன்று திரண்டு கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளோம்.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை