உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கல்வி உபகரணங்கள்

கல்வி உபகரணங்கள்

பந்தலூர் : பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. கொளப்பள்ளி கூடு அறக்கட்டளை, பெங்களூர் இன்போசிஸ் நிறுவனம் இணைந்து கொளப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கின. கூடு அறக்கட்டளை இயக்குனர் சன்னி தலைமை வகித்தார். இன்போசிஸ் நிறுவன துணை மேலாளர் பைஜூ பங்கேற்றார். 30 பழங்குடியின மாணவர்களுக்கு ஸ்கூல் பேக், நோட்டு புத்தகம், பேனா, பென்சில், குடை உள்ளிட்ட மாணவர்களுக்கு தேவைப்படும் பொருட்கள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் மைக்கேல், சகாதேவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூடு அலுவலக உதவியாளர் அப்சல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை