உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொடர்ந்து மூன்று நாட்களுக்கு புகை மருந்து; ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தல்

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு புகை மருந்து; ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தல்

சூலுார்;டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'ஹாட் ஸ்பாட் பகுதிகளில், மூன்று நாட்களுக்கு, காலை, மாலை நேரங்களில் புகை மருந்து அடிக்க வேண்டும், என, ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.சூலுார் யூனியன் அலுவலகத்தில், டெங்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், செயலர்கள், பணி மேற்பார்வை யாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ( ஊராட்சிகள்) முத்துராஜூ பேசியதாவது :ஒவ்வொரு ஊராட்சியிலும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். சாலை ஓரங்களில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். 'ஹாட் ஸ்பாட்' என, கண்டறியப்பட்ட பகுதிகளில், பொது சுகாதாரத்துறையினருடன் இணைந்து, மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகை மருந்து இருப்பு இல்லை எனில், சுகாதார ஆய்வாளரின் சான்று பெற்று ஊராட்சி பொது நிதியில் இருந்து விதிமுறைகளுக்கு உட்பட்டு புகை மருந்தை கொள்முதல் செய்து கொள்ளலாம். சுகாதாரத்துறை ஆலோசனைப்படி குடிநீர் தொட்டிகள் குளோரினேசன் செய்யப்பட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட வேண்டும். அதுகுறித்த விபரங்கள் தெரியப்படுத்த வேண்டும்.'ஹெல்பிங் ஹார்ட்' தன்னார்வ சேவை நிறுவனத்தின் சார்பில், பயன்படுத்தப்பட்ட ஆடைகள் பெறப்பட்டு, அவற்றை மீள் சுழற்சி செய்து, சூலுார் வட்டார பகுதியில் வறுமையில் வாடும் மக்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, ஊராட்சி நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை