உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குந்தா ஊராட்சி உருவாக்க முதல்வருக்கு கிராம மக்கள் மனு

குந்தா ஊராட்சி உருவாக்க முதல்வருக்கு கிராம மக்கள் மனு

ஊட்டி;குந்தா ஊராட்சி புதியதாக உருவாக்கி தர, மாநில முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. குந்தா பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சார்பில் சுப்ரமணி என்பவர் முதல்வருக்கு அனுப்பிய மனு:ஊட்டி ஊராட்சி ஒன்றியம், 23 ஊராட்சி உறுப்பினர்களை கொண்டு இயங்கி வருகிறது. இந்த ஒன்றியத்தின் கீழ், பாலகொலா ஊராட்சி, இத்தலார் ஊராட்சி, முள்ளிகூர் ஊராட்சிகள் அதிகமக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளாக உள்ளன.அதில், பாலகொலா ஊராட்சியில், 3 சிற்றுாராட்சி, இத்தலார் ஊராட்சியில் இரண்டு சிற்றுாராட்சி, மேல்குந்தா ஊராட்சியில் இரண்டு சிற்றுராட்சிகளாகவும் பிரித்து, புதியதாக குந்தா ஊராட்சி ஒன்றியம் உருவாக்கிட ஏற்கனவே உள்ளாட்சி நிர்வாகம் திட்டம் அறிக்கை தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.இத்திட்டம், கடந்த பல ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றம் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு,மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை