உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வீட்டை சுற்றி வந்த குரங்கு சிக்கியது

 வீட்டை சுற்றி வந்த குரங்கு சிக்கியது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் ஒரு வீட்டை சுற்றிவந்த குரங்கை வனத்துறையினர் பிடித்தனர்.அந்த வீட்டில் வளர்க்கப்பட்டதா என விசாரித்தனர்.ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் ஒரு வீட்டருகே சில மாதங்களாக குரங்கு ஒன்று திரிந்தது. அதனை அந்த வீட்டில் வளர்ப்பதாக புகார் வந்தது. மாவட்ட வனத்துறையினர் நேற்று முன்தினம் (மார்ச் 23ல்) சோதனைக்கு சென்ற போது வீட்டை சுற்றி வந்த ஒரு குரங்கை பிடித்தனர்.ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ேஹமலதா கூறுகையில், குரங்கு மீட்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டுள்ளோம். ரேஞ்சர் குழுவினர் சென்ற போது வெளியே குரங்கு இருந்தது. இதனால் வீட்டில் வளர்க்கப்பட்டதா என விசாரணை நடக்கிறது. அதன் பிறகுதான் முழு விபரம் கூறமுடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை