உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வலையில் சிக்கிய அரியவகை ஆமை மீட்டு கடலில் விடுவிப்பு

வலையில் சிக்கிய அரியவகை ஆமை மீட்டு கடலில் விடுவிப்பு

தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடலில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை பெருந்தலை ஆமையை மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.தொண்டி மகாசக்திபுரத்தை சேர்ந்த மீனவர்கள் சண்முகம் 55, காளிதாஸ் 24, நேற்று முன்தினம் நாட்டுபடகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நீண்ட துாரம் சென்று மீன்பிடித்து கொண்டிருக்கும் போது, வலையில் அரிய வகை பெருந்தலை ஆமை சிக்கி உயிருக்கு போராடியது. மீனவர்கள் வலையை இழுத்து அந்த ஆமையை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இன பெருக்கத்திற்காக ஆமை கடற்கரையை நோக்கி வருவது அதிகரித்துள்ளது. ஆமை வலையில் சிக்கியதால் வலை சேதமடைந்தது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை