உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அன்ன வாகனத்தில் மோகினியாக அம்மன்

அன்ன வாகனத்தில் மோகினியாக அம்மன்

பரமக்குடி, : பரமக்குடி முத்தாலம்மன் கோயில் 8 ம் நாள் விழாவில் காலை அன்ன வாகனத்தில் அம்மன் வலம் வந்தார்.தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நேற்று காலை வெள்ளி அன்ன வாகனத்தில் பூக்கள் அலங்காரத்திற்கு மத்தியில் அம்மன் மோகினி அவதாரத்தில் வலம் வந்தார்.இரவு 7:00 மணிக்கு அம்மன் ராஜாங்க திருக்கோலத்தில் குதிரை வாகனத்தில் அலங்காரமாகினார். வாண வேடிக்கைகள் முழங்க, மேள தாளங்களுடன் வீதி வலம் வந்து கோயிலை அடைந்தார். இன்று காலை அக்னி சட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் விழாவும், இரவு 8:00 மணிக்கு மின் தீப அலங்கார தேரில் அம்மன் நான்கு மாட வீதிகளில் வலம் வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை