உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கார் மோதி விபத்து: வாலிபர் பலி

கார் மோதி விபத்து: வாலிபர் பலி

தேவிபட்டினம் : ராமநாதபுரம் அருகே சிக்கல் தாத்தங்குடியைச் சேர்ந்த ஷேக் முகமது மகன் அபூபக்கர் சித்திக் 21. இவர் தேவிபட்டினம் அருகே மாதவனுாரை சேர்ந்த நண்பர் பாலாஜி 26, என்பவரை சந்தித்துவிட்டு இருவரும் டூவீலரில் மாதவனுாரில் இருந்து ராமநாதபுரத்திற்கு சென்றுள்ளனர். நேற்று மாலை 4:30 மணிக்கு திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை தேவிபட்டினம் கழனிக்குடி அருகே சென்ற போது பின்னால் வந்த கார் டூவீலர் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் டூவீலரை ஓட்டிய அபூபக்கர் சித்திக், பின்னால் இருந்த பாலாஜி இருவரும் பலத்த காயமடைந்தனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அபூபக்கர் சித்திக் பலியானார். தேவிபட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை