உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தி  கூடாரமானது ராமநாதபுரம் ஊருணிகள்

கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தி  கூடாரமானது ராமநாதபுரம் ஊருணிகள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர், கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதரமாக உள்ள ஊருணிகள் பராமரிக்கப்படாமல் சாக்கடை கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தி கூடாரமாக மாறியுள்ளன.ராமநாதபுரம் நகராட்சி மற்றும் அருகேயுள்ள சக்கரகோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதிகளில் ஊருணிகள் உள்ளன. ஒரு காலத்தில் இந்த ஊருணி தண்ணீரை மக்கள் குளிக்க, துணி துவைக்க பயன்படுத்தினர். நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதராமாகவும் ஊருணிகள் உள்ளன.இந்நிலையில் பல ஊருணிகள் பராமரிக்கப்படாமல் அப்படியே விட்டுள்ளனர். அவ்விடங்களில் தண்ணீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து மழைநீர் முழுமையாக சேகரிக்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக சக்கரகோட்டை ஊராட்சியில் ராமேஸ்வரம் மெயின் ரோட்டிலுள்ள சோற்று ஊருணி பராமரிக்கப்படாமல் கழிவுநீர் கலந்து 'செப்டிக் டாங்க்' குளமாக மாறி கொசுக்கள் உற்பத்தி கூடாரமாக உள்ளது. இதன் அருகே குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொசுத் தொல்லையால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே ஊருணியில் கழிவுநீர் கலப்பு, குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். கரையை மேம்படுத்தி வேலி அமைக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை