| ADDED : ஆக 19, 2024 12:43 AM
ரெகுநாதபுரம்: தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில், ரெகுநாதபுரம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இரட்டையர் மாணவிகள் ரித்யா, ரிதன்யா ஆகியோர் சாதித்துள்ளனர்.சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் ஆக., 17 மற்றும் 18ல் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து மாநில போட்டியில் வென்ற பள்ளி மாணவர்கள் மட்டும் பங்கேற்றனர். கராத்தே போட்டியில் 6 முதல் 14 வயது வரை உள்ள சப் ஜூனியர் பிரிவு வீரர்களுக்கு கட்டா, குமித்தே போட்டி நடந்தது. 8 வயது குமித்தே போட்டியில் ரெகுநாதபுரம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 4ம் வகுப்பு மாணவி இரட்டையர்கள் ரித்யா முதலிடம் தங்கம், ரிதன்யா 2ம்இடமும் பிடித்து வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளனர். இவர்கள் டிச., 2024 டெல்லியில் நடக்கும் இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை தாளாளர் கோகிலா, நிர்வாக ஆலோசகர் ஜேக்கப், முதல்வர் பிரீத்தா, கராத்தே பயிற்சியாளர் சசிகுமார் ஆசிரியர்கள் பாராட்டினர்.