உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை பகுதி கிழக்கு கடற்கரை சாலையில்  விபத்து அபாயம் டூவீலர், கார்களில் அதிவேகமாக செல்கின்றனர்

கீழக்கரை பகுதி கிழக்கு கடற்கரை சாலையில்  விபத்து அபாயம் டூவீலர், கார்களில் அதிவேகமாக செல்கின்றனர்

கீழக்கரை, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 12:00 மணிக்கு மேல் 4:00 மணிக்குள் கிழக்கு கடற்கரை சாலையில் டூவீலர்கள் மற்றும் கார்களில் அதிவேகமாக செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களை முன்னிட்டு இரவு நேரங்களில் கூட்டமாக டூவீலர்களின் திரியும் இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ராமநாதபுரம் மற்றும் ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு சென்று உணவருந்தி விட்டு மீண்டும் ஆபத்தான முறையில் வேகமாக வரும் செயல் தொடர்கிறது. சில தினங்களுக்கு முன் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் கார் மீது கீழக் கரையை சேர்ந்தவரின் கார் அதி வேகமாக மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன. தன்னார்வலர்கள் கூறியதாவது: எனவே ராமநாதபுரம், கீழக்கரை நகர் பகுதியில் அதிகாலை 12:00 மணியில் இருந்து 4:00 மணி வரையிலும் போலீசார் ரோந்து செல்ல வேண்டும். இரவு நேரத்தில் டூவீலர் ஓட்டி சாகசம் செய்வோர் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருத்தல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. ராமேஸ்வரம், திருச்செந்துார், கன்னியாகுமரி, துாத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக கீழக்கரை கிழக்கு கடற்கரைச் சாலை உள்ள நிலையில் பைக் ரைடர்ஸ் பொழுது போக்காக இரவு நேரங்களில் வண்டி ஓட்டுபவர்கள் விழிப்புணர்வுடன் ஓட்ட வேண்டும். அதை விடுத்து மகிழ்ச்சிக்காகவும் மது போதைக்காகவும் வேகமாக வாகனங்களை இயக்குவதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே கீழக்கரை போலீசார் இது போன்ற வாகனங்களுக்கு உரிய முறையில் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை