உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பற்றாக்குறை பெயரளவில் நடப்பதாக நோயாளிகள் வேதனை

ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பற்றாக்குறை பெயரளவில் நடப்பதாக நோயாளிகள் வேதனை

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் வேதனைப்படுகின்றனர்.இங்கு ரெகுநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.10 படுக்கை வசதி கொண்டுள்ளது. பிரசவ வார்டும் உள்ளது.ஒரு டாக்டர், இரண்டு நர்சுகள் மட்டுமே பணிபுரிகின்றனர். இரவு நேரங்களில் நாய்க்கடி, விஷக்கடி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றால் ராமநாதபுரம் செல்லுங்கள் என பரிந்துரைக்கும் மையமாக இயங்கி வருவதாக நோயாளிகள் குற்றம் சாட்டினர்.நோயாளிகள் சிலர் கூறுகையில், காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே டாக்டர் உள்ளார். மற்ற வேலை நேரங்களில் டாக்டர் இருப்பதில்லை. ஒரு நர்ஸ் மட்டுமே உள்ளார்.காய்ச்சல், தலைவலி, சிறு விபத்து உள்ளிட்ட அத்தியாவசிய சிகிச்சை பெறுவதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றால் சுகாதார நிலையத்தில் மெயின் கதவை பூட்டிவிட்டு ஜன்னல் வழியாக மருந்து மாத்திரைகளை மட்டுமே கொடுக்கின்றனர்.ஏதாவது கேட்டால் ராமநாதபுரம் செல்லுங்கள். அவ்வளவு தான் செய்ய முடியும் எனக் கூறுகின்றனர். இதனால் பெரும்பாலானோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வராமல் ரெகுநாதபுரத்தில் இருந்து 17 கி.மீ.,ல் உள்ள ராமநாதபுரம் சென்று சிகிச்சை பெறுகின்றனர்.ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொது மக்களுக்கு உரிய சேவை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ