உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பரமக்குடியில் ஒரே நாளில் 22ல் இருந்து 29 டிகிரியாக மாறிய வானிலை

 பரமக்குடியில் ஒரே நாளில் 22ல் இருந்து 29 டிகிரியாக மாறிய வானிலை

பரமக்குடி: பரமக்குடியில் நேற்று முன்தினம் 22 டிகிரி இருந்த வானிலை, நேற்று 29 டிகிரியாக மாறியது. இதனால் ஊட்டி குளிரை அனுபவித்த மக்கள், நேற்று ஒரே நாளில் மீண்டும் உஷ்ணத்தை உணர்ந்தனர். வங்க கடலில் 'டிட்வா' புயல் உருவான நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்நிலையில் பரமக்குடியில் நவ., 28 காலை தொடங்கி 29 இரவு வரை இரண்டு நாட்கள் விடாமல் மழை பெய்தது. மேலும் பனிமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசியது. இதனை அடுத்து 22 டிகிரியாக மாறிய வானிலையால் கொடைக் கானல் போல் குளிர்ச்சியை உணரச் செய்தது. தொடர்ந்து நேற்று காலை நிலவரப்படி 6:00 மணி முதல் 23 டிகிரியிலிருந்து மதியம் 1:00 மணிக்கு வெப்பநிலை 29 டிகிரியாக மாறியது. இந்நிலையில் உஷ்ணத்தை மக்கள் உணர்ந்தாலும் குளிர்ந்த காற்று வீசியதால் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை