உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீட்டில் பதுக்கிய  புகையிலை பறிமுதல்  இருவர் கைது

வீட்டில் பதுக்கிய  புகையிலை பறிமுதல்  இருவர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.பட்டணம்காத்தான் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டில் புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு கட்டுக் கட்டாக புகையிலைப்பொருட்கள் இருந்தன. புகையிலை விற்ற பணம் ரூ.37 ஆயிரம், 2 அலைபேசிகள், 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த செல்லமுத்து 47, பரமக்குடி முதலுார் ஆறுமுகம் மகன் ராஜீவ்காந்தி 40, ஆகிய இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ