உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊத்தங்கரை அருகே ஓடும் பஸ்சில் தீ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

ஊத்தங்கரை அருகே ஓடும் பஸ்சில் தீ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

ஊத்தங்கரை : திருப்பூரில் இருந்து, திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ், ஊத்தங்கரை அருகே வரும்போது இன்ஜினில் திடீரென தீப்-பிடித்ததால், பயணிகள் அச்சமடைந்தனர்.திருப்பூரில் இருந்து, திருவண்ணாமலைக்கு அன்னதான பொருட்கள் மற்றும் 35 பயணிகளுடன், திருப்பூர் பணிமனையை சேர்ந்த அரசு பஸ் நேற்று மாலை சென்றது.திருப்பூரை சேர்ந்த கார்த்திக், 35, என்பவர் ஓட்டி சென்றார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டி காப்-புக்காடு அருகே பஸ் வரும்போது, இன்ஜினில் தீப்பிடித்தது.உடனடியாக டிரைவர் பயணிகளை பாதுகாப்பாக இறக்கினார். ஊத்தங்கரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பஸ் ஊத்தங்கரை அரசு பஸ் டிப்போவிற்கு எடுத்து செல்லப்பட்டது.பஸ்சில் சென்ற பயணிகள் காயம், உயிர்சேதம் இன்றி அதிர்ஷ்-டவசமாக உயிர் தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை