உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் கலெக்டர் அலுவலகம் முன் ஒரே நாளில் மூவர் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகம் முன் ஒரே நாளில் மூவர் தீக்குளிக்க முயற்சி

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று மூன்று பேர் தீக்-குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறை தீர் முகாம் நடந்தது. இதில் தலைவாசல் அடுத்த லத்துவாடியை சேர்ந்த கவிதா, மருமகள் சினேகா, 24, மற்றும் இரு குழந்தைக-ளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின் மறைத்து வைத்தி-ருந்த மணணெண்ணெய் கேன் எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர் அப்-போது அவர்கள் கூறுகையில்,' கடந்த, 10 ஆண்டுகளாக லத்து-வாடி பகுதியில் வசித்து வருகிறோம். மின் இணைப்பு கேட்டு மின்வாரிய அலுவலகத்தை அணுகினோம். அவர்கள் வருவாய் துறையிடம் தடையில்லா சான்று வாங்கி வரும்படி கேட்டனர். வருவாய்துறையினர் தர மறுக்கின்றனர். இதனால் வீட்டில் மின் இணைப்பு இல்லாமல் தவித்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.* அயோத்தியாப்பட்டணம் அருகே தர்மாபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, 40, கலெக்டர் அலுவலகம் வந்த போது, பெட்ரோல் கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். விசாரணையில், ராஜேஸ்-வரி கூறுகையில்,'' இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்-ணப்பித்திருந்தேன். எனது தந்தை எனக்கு நிலம் வழங்கினார். அந்த நிலத்தில் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுத்த-போது, அதிகாரிகள் ஆவணங்கள் கேட்டனர். சகோதரனிடம் ஆவணங்கள் இருப்பதால் அவர் தர மறுக்கிறார். அவர் மீது நடவ-டிக்கை எடுத்து, ஆவணங்களை பெற்று தர வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி