உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரால் அணைக்கக்கூடாது

மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரால் அணைக்கக்கூடாது

சங்ககிரி: சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில், அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மின் பாதுகாப்பு வார விழா நேற்று கொண்டாடப்பட்டது. தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். முன்னாள் துணை ஆளுனர் ஹெலினா கிறிஸ்டோபர் பேசு-கையில், ''மாணவியர் தரமான மின்சாதனங்களை மட்டும் பயன்-படுத்த வேண்டும். நீரில் நனைந்த மின்விசிறி, விளக்குகளை மின்சாரம் வந்ததும் இயக்கக்கூடாது. சேதமான மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுவிட்சை அணைத்த பின், 'பிளக்'கில் இருந்து ஒயரை பொருத்த, அகற்ற வேண்டும். மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரால் அணைக்க கூடாது. உடனே மின்வாரிய அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி