உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செயல் அலுவலர்கள் பொறுப்பேற்பு

செயல் அலுவலர்கள் பொறுப்பேற்பு

கெங்கவல்லி, ஆக. 22-கெங்கவல்லி அருகே தெடாவூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மாதவன் பதவி உயர்வில், பெத்தநாயக்கன்பாளையம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார். இதனால் ஈரோடு, அவல்பூந்துறை செயல் அலுவலர் யவனராணி, தெடாவூருக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று, தெடாவூர் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார்.அதேபோல் கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சாந்தி, கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அப்பணியிடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஜனார்த்தனன் மாற்றப்பட்டார். அவரும் கெங்கவல்லியில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை