உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விவசாய தோட்டத்தில் மூன்று ஆடுகள் திருட்டு

விவசாய தோட்டத்தில் மூன்று ஆடுகள் திருட்டு

தலைவாசல்: தலைவாசல் அருகே, விவசாய தோட்டத்தில் கட்டியிருந்த மூன்று ஆடுகள் திருட்டுபோனது.தலைவாசல் அருகே, புத்துார் கிராமத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் மனைவி பஞ்சவர்ணம், 47. இவர், தனது விவசாய தோட்டத்தில் ஆடு, மாடுகளை கட்டிவிட்டு வந்துள்ளார். நேற்று, விவசாயத் தோட்டத்திற்கு சென்றபோது, மூன்று 'கிடா' ஆடுகளை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, பஞ்சவர்ணம் அளித்த புகார்படி, தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ