உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மகனுக்கு வெளிநாட்டில் வேலை தந்தையிடம் ரூ.15 லட்சம் மோசடி

மகனுக்கு வெளிநாட்டில் வேலை தந்தையிடம் ரூ.15 லட்சம் மோசடி

சேலம்:சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த மீனவர் கண்ணன், 54, என்பவரின் மகன் ஆப்ரிக்காவில் மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரின் வேலை ஒப்பந்தம் முடிவுக்கு வர உள்ளதால், ஆன்லைன் மூலம் வேறு நாடுகளில், அவரின் தந்தை வேலை தேடினார்.அப்போது, கனடா நாட்டில் அதிக சம்பளத்துக்கு வேலை இருப்பதாக, ஆன்லைனில் சிலர் பேசினர். வேலை ஒப்பந்த பத்திரம், விசா, பாஸ்போர்ட் அனைத்தும் வீட்டுக்கே நேரடியாக வந்து வழங்கப்படும் என, கண்ணனிடம் அவர்கள் உறுதி அளித்தனர்.அதை உண்மை என நம்பி, அந்த மர்ம நபர்கள் கேட்ட, 15 லட்சம் ரூபாயை, பல தவணைகளாக வங்கியில் கண்ணன் செலுத்தினார். பணம் சென்றடைந்த நிலையில், மர்ம நபரின் தொடர்பு எண்கள் துண்டிக்கப்பட்டன.ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்ணன் அளித்த புகார்படி, சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை