உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அம்ரித் பாரத் திட்டப்பணி பொது மேலாளர் ஆலோசனை

அம்ரித் பாரத் திட்டப்பணி பொது மேலாளர் ஆலோசனை

சேலம், நவ. 20'அம்ரித் பாரத்' திட்டத்தில், சேலம் ரயில்வே ஸ்டேஷன் நவீனப்படுத்தும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் சிங், நேற்று சேலம் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு செய்தார். ரயில் நிலைய முகப்பு, பயணியருக்கு அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார். சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால் உள்ளிட்ட ரயில்வே அலுவலர்கள் உடனிருந்தனர். முன்னதாக, ஈரோடு, திருப்பூர், வடகோவை, போத்தனுார் ஸ்டேஷன்களில், பொது மேலாளர் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை