உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பத்ரகாளியம்மன் தேரோட்டம்: பக்தர்கள் தரிசனம்

பத்ரகாளியம்மன் தேரோட்டம்: பக்தர்கள் தரிசனம்

மேச்சேரி: மாசி மக பெருவிழாவையொட்டி, சேலம் மாவட்டம் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று மாலை, 4:00 மணிக்கு சின்ன தேர் வீதி உலா நடந்தது. ஐ.ஜி., துரைகுமார், நிலையத்தில் இருந்து தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.விநாயகர் தேர் முன் செல்ல, அம்மன் சின்ன தேர், சந்தைப்பேட்டை, கிராமச்சாவடி வழியே சென்று, மாலை, 6:00 மணிக்கு நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்ததோடு, தரிசனம் செய்தனர். ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், கோவில் செயல் அலுவலர் திருஞானசம்பந்தர், மேச்சேரி சார் பதிவாளர் ேஹமா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இன்று மாலை, 4:00 மணிக்கு பெரிய தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை