உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ்சை நிறுத்தி ரகளை குடிகாரர்கள் கைது

பஸ்சை நிறுத்தி ரகளை குடிகாரர்கள் கைது

கெங்கவல்லி: கெங்கவல்லியை சேர்ந்தவர் சரவணகுமார், 25. அரசு பஸ்சில் தற்-காலிக டிரைவராக பணிபுரிகிறார். நேற்று காலை, 11:50 மணிக்கு, திருச்சியில் இருந்து ஆத்துார் நோக்கி, அரசு பஸ்சை ஓட்டி வந்தார். கெங்கவல்லி, 4 ரோட்டில் வந்தபோது, இருவர் பஸ்சை வழிமறித்து நிறுத்தி, சர-வணகுமாரிடம் தகராறு செய்தனர். இதையறிந்து அங்கு வந்த, கெங்கவல்லி போலீசார், பஸ்சை அனுப்பிவிட்டு, ரகளை செய்த இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.அதில் ஆணையாம்பட்டி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த பூபதி, 23, பாலாஜி, 25, என்பதும், லாரி டிரைவர்களான இருவரும், 'போதை'யில் ரகளை செய்ததும் தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 10 நாட்களுக்கு ஸ்டேஷனில் கையெழுத்திட உத்தரவிட்டு, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை