| ADDED : ஜன 02, 2026 05:07 AM
இடைப்பாடி: சங்ககிரி அருகே குறுக்குப்பாறையூரில், அரசிராமணி டவுன் பஞ்-சாயத்து நிர்வாகம் சார்பில், திடக்கழிவு மேலாண் கிடங்கு, விவசா-யிகள் எதிர்ப்பை மீறி சமீபத்தில் திறக்கப்பட்டது. ஆனால் அப்-பணி தொடங்கியது முதலே, விவசாய சங்கத்தினர், பல்வேறு ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு எதிர்ப்பை வெளிப்ப-டுத்தி வருகின்றனர்.குறிப்பாக அந்த கிடங்கால், விவசாய நிலம், விவசாயிகள், மக்க-ளுக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்படும் என கூறினர்.இதனால் அந்த கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றி, அந்த இடத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க கோரி, தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலர் பெருமாள் தலைமையில் பலர், 200ம் நாளாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரை நிர்வாணமாக நின்றதோடு, உடல், நெற்றியில் நாமம் போட்டு, சங்கு ஊதி, நுாதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்-தினர்.அப்போது, 'இதே நிலை நீடித்தால், தி.மு.க., ஆட்சிக்கு நாமம் போடப்படும்' என கோஷம் எழுப்பினர். சேலம் மாவட்ட செயலர் ராமமூர்த்தி, சங்ககிரி தாலுகா தலைவர் ராஜேந்திரன் உள்-ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.