உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சங்ககிரி அருகே அரசு பள்ளிக்கு முதன்முறையாக பஸ் இயக்கம்

சங்ககிரி அருகே அரசு பள்ளிக்கு முதன்முறையாக பஸ் இயக்கம்

சங்ககிரி : சங்ககிரி அருகே உள்ள, வடுகப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேற்று முதன்முறையாக பஸ் இயக்கப்பட்டது. சங்ககிரி தாலுகா, வடுகப்பட்டி, வைகுந்தம், இருகாலுார், ஊத்துப்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் வடுகப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். கிராமப்புறத்தில் இருக்கும் மாணவ, மாணவிகள் உரிய பஸ் வசதி இல்லாததால், சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியவில்லை. இது குறித்து பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, முதன் முறையாக நேற்று காலை, 8:30 மணிக்கும், மாலை, 4:30 மணிக்கும் சங்ககிரி அரசு பஸ் பணிமனையிலிருந்து, டவுன்பஸ் இயக்கப்பட்டது. இருகாலுார், துத்திப்பாளையம், மயில்புறாகாடு, நாயக்கன்வளவு, தாதவராயன்குட்டை பிரிவு, காஞ்சாம்புதுார் வழியாக வடுகப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை பஸ் வந்தடையும். அதே போல் திரும்பவும் மாலையில் இதே வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. முதன்முறையாக அரசு பஸ்சை பள்ளி மாணவர்களுக்காக இயக்க உத்தரவிட்ட, தமிழக முதல்வருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ