உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி., மறுபரிசீலனை செய்யப்படும்

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி., மறுபரிசீலனை செய்யப்படும்

சேலம் : 'இண்டியா' கூட்டணி சார்பில், சேலம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி, சேலம் மாநகராட்சியின், 9, 10, 11வது வார்டுக்கு உட்பட்ட பொன்னம்மாபேட்டை, வாய்க்கால்பட்டறை, மன்னார்பாளையம் பிரிவு, அம்மாபேட்டையில், 33, 34, 35, 36-வது வார்டுகளில் பிரசாரம் செய்தார்.பொன்னம்மாபேட்டையில், செல்வகணபதி பேசியதாவது: தமிழகத்தில் பொன்னான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்திக்கொண்டிருக்கிறார். அதற்கு சாட்சியே, இங்கு வந்துள்ள பெண்கள் தான். பெண்கள் முன்னேற்றத்துக்கு எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளார். இந்த ஆட்சி நாடு முழுதும் வரவே, 'இண்டியா' கூட்டணிக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு கேட்கிறேன்.பா.ஜ., ஆட்சியில் நாட்டு மக்கள் பெரிதும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். சிலிண்டர் விலை, 1,200 ரூபாய், அரிசி சிப்பம், 2,000, தங்கம் விலை பவுன், 54,000 ரூபாய் என, விலைவாசி உயர்ந்துள்ளது. இந்த பா.ஜ., ஆட்சியை அகற்ற வேண்டும். நெசவு தொழிலுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி., போட்டு தொழிலை, பிரதமர் முடக்கி வைத்துள்ளார்.'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், ஜி.எஸ்.டி., மறுபரிசீலனை செய்யப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மகளிருக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. பஸ்சில் கட்டணம் இல்லாமல் பயணிக்கிறார்கள். நமக்கு எதிராக பா.ஜ., களம் இறங்கினாலும் அவர்களின் பினாமியாக, இ.பி.எஸ்.,சின் அ.தி.மு.க., களத்தில் உள்ளது. அதனால் அ.தி.மு.க.,வுக்கு அளிக்கும் ஓட்டு, பிரதமருக்கான ஓட்டு. அதனால் தமிழக உரிமைகள் பறிபோக, துணையாக இருந்த, இ.பி.எஸ்.,சை புறந்தள்ளி உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப்போட வேண்டும்.'இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், நாடு முழுதும், மகளிர் உரிமை தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தி தரப்படும். காஸ் சிலிண்டர் விலை, 500 ரூபாய், லிட்டர் பெட்ரோல், 75, டீசல், 65 ரூபாயாக குறைப்போம்' என, நம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதை செய்து தருவார். 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எனக்கு, ஜாதி, மத, பேதம் கிடையாது. உங்களுக்கு உண்மையாக இருப்பேன். அதனால் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப்போட்டு வெற்றி பெறச்செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.இதில் சேலம் மத்திய மாவட்ட, தி.மு.க., செயலர் ராஜேந்திரன், துணை மேயர் சாரதாதேவி, தி.மு.க., அவைத்தலைவர் சுபாஷ், மாநகர அவைத்தலைவர் முருகன், பகுதி செயலர்கள் மோகன், ராஜா, கவுன்சிலர்கள் இந்துஜா, சாந்தி, தெய்வலிங்கம், திருஞானம், இளங்கோ, காங்., மாவட்ட தலைவர் பாஸ்கர், கூட்டணி கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், மக்கள் உள்ளிட்ட பலரும், உதயசூரியன் சின்னதுக்கு ஓட்டு சேகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S.Bala
ஏப் 12, 2024 13:42

அத்தைக்கு மீசையே முலைகள அதுக்குள்ள சித்தப்பாவா


vijai
ஏப் 12, 2024 12:59

கேவலமான ஆட்சி gst மறுபரிசீலனை பண்ண போறீங்களா முதல்ல உங்க கூட்டணியில் யாரு பிரதமர் முடிவு செய்யல


பாண்டி
ஏப் 12, 2024 12:55

மறுபரிசீலனை செய்யப்படுமவா வச்சு செய்வீங்க


vadivelu
ஏப் 12, 2024 10:39

சரி அப்ப இப்போதைக்கு இல்லை


மேலும் செய்திகள்